×

முதல்வர் பிறந்தநாள் விழா 500 பேருக்கு பிரியாணி

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆலந்தூர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் திமுக கொடி ஏற்றியும், இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நங்கநல்லூர் பக்தவச்சலம் நகரில் கொண்டாடப்பட்ட விழாவிற்கு ஆலந்தூர் மண்டலக் குழு தலைவரும் ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளருமான என்.சந்திரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர்கள் இ.உலகநாதன், ஜெ.நடராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்துகொண்டு 500 தாய்மார்களுக்கு வேட்டி, சேலை, பிரியாணி வழங்கினார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி இனிப்பு வழங்கினார். திமுக நிர்வாகிகள் கவுன்சிலர் சாலமோன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன், பி.ஆர்.சுரேஷ், நாகராஜசோழன், வெள்ளைச்சாமி, ரமணா, கேபிள்ராஜா, கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags : Chief Minister ,Biryani , Chief Minister's Birthday Party Biryani for 500 people
× RELATED மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர்...