×

எழும்பூர், ஆவடி, பெரம்பூர் கோட்டங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எழும்பூர் கோட்டத்திற்கு ஓட்டேரி, மலையப்பன் தெருவில் எழும்பூர் கோட்ட அலுவலகத்திலும், ஆவடி கோட்டத்திற்கு என்.எம்.ரோட்டில் உள்ள கோட்ட அலுவலகத்திலும், எம்.ஈ.எஸ். ரோட்டில் உள்ள துணை மின் நிலைய வளாகத்திலும்  நாளை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

துணை மின் நிலையம் மற்றும் கோட்ட அலுவலகங்களில் உள்ள இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என எழும்பூர், ஆவடி, பெரம்பூர் கோட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Egmore ,Aavadi ,Perambur , Egmore, Aavadi, Perambur divisions of electricity consumers grievances meeting
× RELATED சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில்...