பராமரிப்பு பணி காரணமாக கொடுங்கையூர் கழிவு நீரிறைக்கும் நிலையம் நாளை செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணியால் நாளை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மண்டலம்-6 வில்லிவாக்கம் ஜேபிஐசி கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, மண்டலம்-3, 6, 7 மற்றும் 8-க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறினால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பகுதி-3க்கான பொறியாளரை 8144930903 என்ற எண்ணிலும், துணை பகுதிப் பொறியாளரை 8144930253, பகுதி-6க்கான பொறியாளரை 8144930906, துணை பகுதிப் பொறியாளரை 8144930256, பகுதி-7க்கான பொறியாளரை 8144930907, துணை பகுதிப் பொறியாளரை 8144930257, பகுதி-8க்கான பொறியாளரை 8144930908, துணை பகுதிப் பொறியாளரை 8144930258, தலைமை அலுவலகம், (சிந்தாதிரிப்பேட்டை) 044-4567 4567 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: