×

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் முடிவை முன்கூட்டியே கணிக்க முடியாது: ஒன்றிய அரசு கருத்து

புதுடெல்லி: ‘’ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவை முன்கூட்டியே மதிப்பிடுவது சரியாக இருக்காது,’’ என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த 17வது ஜி-20 மாநாட்டில் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 மாநாட்டின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான ஜி-20 மாநாடுகளை இந்தியா தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், முடிவான கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வெளியுறவு அமைச்சர்களுக்கான ஜி20 கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று தொடங்கி இன்று வரை 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதிலும், பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளிடையேயான ஒத்துழைப்பில் உக்ரைன், ரஷ்யா போரினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டறிக்கை வெளியிடப்படுமா? அல்லது ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்ற கேள்விக்கு ஒன்றிய வெளியுறவு செயலர் வினய் மோகன் குவாத்ரா, ‘‘ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவை முன்கூட்டியே மதிப்பிடுவது சரியாக இருக்காது,’’ என்று பதிலளித்தார்.
இந்த கூட்டத்தில் 13 சர்வதேச அமைப்புகள் உள்பட, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 40 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.



Tags : G20 summit ,Delhi ,Union Govt , Outcome of G20 summit in Delhi cannot be predicted in advance: Union Govt
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...