×

நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி:  ஒன்றிய பட்ெஜட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக ஒன்றிய அரசு இணையதள கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் இணையதள கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில்,‘‘சுதந்திரத்துக்கு பிறகு 75 திட்டமிட்ட நகரங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால் உலகில் இந்தியாவின் நிலை முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் ஒன்றிரண்டு திட்டமிட்ட நகரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. எதிர்காலத்துக்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்குங்கள். இந்தியா வேகமாக நகரமயமாகி வருவதால் எதிர்காலத்துக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்தது. நன்கு திட்டமிடப்பட்ட இந்திய நகரங்கள் மட்டும் தான் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.  நமது திட்டமிடல் சிறந்ததாக இருந்தால் நமது நகரங்கள் தட்பவெப்பநிலையை எதிர்கொள்ளக்கூடியதாகவும், தண்ணீர் பாதுகாப்பு கொண்ட நகரங்களாகவும் இருக்கும்” என்றார்.



Tags : PM Modi , Well-planned cities will determine the country's future: says PM Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!