×

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பர்மா பஜாரில் கடைகள் எரிந்து சேதம்

வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பர்மா பஜார் உள்ளது. இங்கு ெசல்போன், மின்னணு சாதன பொருட்கள், காலணிகள், துணிக்கடைகள் என 30க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடப்பது வழக்கம். இன்று அதிகாலை 1 மணியளவில் பர்மா பஜாரில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து வேலூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் 2 கடைகள் தீயில் கருகியது.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘பர்மா பஜாரில் உள்ள அகமதுவுல்லா என்பவரின் காலணி கடையில் இருந்து மின் இணைப்பில் பழுது ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அருகில் இருந்து தனசேகர் என்பவரின் மின்சாதன கடைக்கு பரவியது. இதனால் இருக்கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ₹50 ஆயிரம் ஆகும்’ என்றனர். 


Tags : Barma Bazaar ,Vellore Old Bus Station , Stores in Barma Bazaar at Vellore Old Bus Station were damaged by fire
× RELATED வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி,...