பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் வழங்கினார். இன்று ஹமிழ்நாடு வீட்டு வாசகி வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்கும் 53 இளநிலை உதவியாளர்கள், 3 தொழில்நுட்ப உதவியாளர்கள், 1 தட்டச்சர், 2 ஓட்டுநர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளும், 14 இளநிலை வரைவு ஆய்வாளர்களுக்கு வரைவு அலுவலர்களாகவும், 1 கண்காணிப்பாளருக்கு உதவி வருவாய் அலுவலராகவும், 3 உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா,  வாரிய மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், வாரிய செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சரவணாமூர்த்தி மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: