×

எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களின் அத்துமீறல் தொடர்கிறது: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

சென்னை: அனைத்து சக்திகளையும் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பார் என்று மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர்,  நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். எப்பொழுதுமே தமிழ்நாடு முற்போக்கு சமுதாயமாக இருந்து வந்துள்ளது. ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது.

தமிழ்நாடு எப்போது முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூகநீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்திய ஒற்றுமை பயணம் மாபெரும் வெற்றி பெற்றது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா முடித்து வைத்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களின் அத்துமீறல் தொடர்கிறது.

பிரிவினை சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நீதித்துறையை எப்படியாவது தங்களின் கைக்குள் கொண்டுவர வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்குவார். திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து 2024 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். பாஜக அரசின் கொள்கைகளால் 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் இவ்வாறு கூறினார்.

Tags : Governors' ,Mallikarjuna Kharge , Governors' abuses continue in all opposition-ruled states: Mallikarjuna Kharge alleges
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...