×

திராவிட மாடல் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எடுத்து செல்லும் அளவிற்கு உள்ளது: டி.ஆர்.பாலு உரை

சென்னை: திராவிட மாடல் கொள்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எடுத்து செல்லும் அளவிற்கு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இதுவரை, 2019 நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என 4 தேர்தலில் முதலமைச்சர் வெற்றியை பெற்று தந்துள்ளார். நாளை வரவுள்ள வெற்றி உங்களுக்கு தெரியும்; நம் மாநில தேர்தலில் 4 தேசிய கட்சிகள், 6 மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, அணைத்து செல்கின்ற பண்புதான் முதலமைச்சரின் சிறப்பு. இது இந்திய நாட்டின் அரசியலுக்கான தடம். இந்திய நாட்டின் அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.


Tags : drawidi ,Tamil Nadu ,India ,R.R. Balu , The Dravidian Model Policy is not only Tamil Nadu, but all over India: DR Balu speech
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...