×

கொரோனாவால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்ககோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனாவால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்ககோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் வழங்ககோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது. தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றினால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைந்தனர். இதனால் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சான்று வழங்குமாறு பொதுநல வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சான்று வழங்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,ICourt , Petition to issue mark certificate to 10th class students whose exam was canceled due to Corona dismissed: ICourt order
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...