×

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 0.2% ஆக குறைத்து அறிவித்தது சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மூடிஸ்..!!

டெல்லி: சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 0.2 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது. 2022 - 23ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் முன்பு கணித்திருந்தது. தற்போதைய உலக பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாகவே இருக்கும். அதே நேரத்தில் 2023 - 24ம் ஆண்டில் இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.5 ஆக இருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் கூறியுள்ளது.

2023 - 24ல் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருக்கும் என்ற தன் முந்தைய கணிப்பை தற்போது மூடீஸ் உயர்த்தியுள்ளது. ஜனவரியில், சர்வதேச நாணய நிதியம் அதன் உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில், அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தில் சில மந்தநிலையை எதிர்பார்க்கிறது என்றும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

Tags : Moody's ,India , 0.2%, the international rating agency Moody's
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...