பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து சொல்வதற்காக திரளாக நிற்பதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துக்கொண்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் முதலமைச்சர் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய செல்வப்பெருந்தகை, சீமான், அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ், ப.சிதம்பரம், எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன், ராமதாஸ் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Stories: