அமிதாப், தர்மேந்திரா, முகேஷ் அம்பானி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாக்பூர் போலீசார் விசாரணை

நாக்பூர்: நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தெலைபேசியில் அழைப்பில் பேசிய நபர், ‘பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் தர்மேந்திரா, தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளை வெடிவைத்து தகர்க்க உள்ளோம். இதற்காக 25 பேர் தாதருக்கு வந்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டப்படி தாக்குதல்களை நடத்துவார்கள்’ எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதையடுத்து மும்பை போலீசை தொடர்பு கொண்ட நாக்பூர் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு தடுப்பு படையினருடன் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டலானது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இருந்தும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: