×

விரைவில் சீமைக்கருவை மரங்களை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு உறுதி

மதுரை: கண்மாய்கள், நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் கீழ் ஏற்கனவே தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

அந்த உத்தரவை அடுத்து இன்று வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தின் கீழ் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சீமைக்கருவைகள் மரங்களை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை ஏற்று தற்போது இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu , Steps will soon be taken to completely remove sycamore trees: Tamilnadu govt confirms in iCourt branch
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...