சென்னை: மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்ப்பீர், நாளை நலமாக என்று முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். என் அன்புக்கட்டளையை ஏற்று புத்தகங்களை பரிசாக தந்தவர்களுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றை வழங்கினேன். மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்ற கலைஞரின் சொற்படி மரக்கன்றை நட்டு வைத்தேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
