×

அரசியலில் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது: திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை: அரசியலில் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக தடுக்க முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்றும் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். சமீபத்தில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான போது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது போல தமிழ்நாட்டிலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான அபாயம் இருப்பதாக அவர் கூறினார். இந்த ஆபத்தை முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக திருமாவளவனை தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : BJP ,Thirumavalavan , Politics, PMK, BJP alliance, Vishika, Thirumavalavan
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்