×

இலங்கை அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் : தடையை மீறி போராடினால் வேலைபறிபோகும் என அதிபர் எச்சரிக்கை!!

கொழும்பு : இலங்கையில் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்  வாக்குச்சீட்டுகளை அச்சிடக் கூட பணம் இன்றி அரசு தவித்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இதனிடையே அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதை கண்டித்து போக்குவரத்து உள்ளிட்ட 40 முக்கிய துறைகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினர், இன்று வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிக வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை அமல்படுத்தியுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை விதித்துள்ளார். தடையை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டால் வேலைபறிபோகும் என்று எச்சரித்துள்ளார்.


Tags : Government ,Chancellor ,President ,Sri Lanka , Sri Lanka, trade unions, strike, job loss
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...