மணப்பாறை அருகே வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோவில் தேர் பவனி: ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியக்காண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெரிய தேர் பவனி நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர் சங்கர் பெரியக்காண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் மாசி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நடைபெற்றது.

அப்போது திருச்சி மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியக்காண்டியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. தேர் கோவிலை சுற்றி வரும் போது தேரின் மீது மலர் மாலைகளை பக்தர்கள் வீசி அம்மனின் அருளை பெற்றனர். கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர் கோவிலை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: