×

70வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: இன்று 70வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அரை நூற்றாண்டுக்கு மேலாக பொது வாழ்வில் மக்கள் பணியாற்றும் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

கி. வீரமணி: 70வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  உழைப்பால் உயர் நிலையை அடைந்த உன்னத தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்கிட வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இணையமைச்சர் எல்.முருகன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நோய் நொடியின்றி பல்லாண்டு மக்கள் பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை மேயர் பிரியா:
சென்னை மேயர் பிரியா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எங்கள் இதயங்களில் வாழும் திராவிட தளபதியே! உழைப்பால் உயர்ந்திட்ட திராவிட தலைவரே ..! இந்திய ஒன்றியத்தின் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வரே …! உம்மை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்… என்று தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Delhi ,Kejriwal ,Minister ,Udayanidhi Stalin , 70th Birthday, Prime Minister M. K. Stalin, Kejriwal, Udayanidhi Stalin
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...