×

உணவு பற்றாக்குறையால் தவிக்கும் வடகொரியா மக்கள்: உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசித்த கிம் ஜாங் உன்

வடகொரியா: வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் அவற்றை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். வடகொரியநாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும். உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால். இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் விவசாயம் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


Tags : North Koreans ,Kim Jong Un , Food shortages, North Korea, High-level panel, Consultation
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை