×

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.!

புதுக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்னும் 2 வாரத்தில் வரவுள்ளது . திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேரோட்டம் அங்கு மிகவும் பிரபலம்.

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, வருகிற மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ள்ளார். மேலும், 13ஆம் தேதி வேலை நாள் விடுமுறை என்பதால், அதனை ஈடு செய்ய வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

Tags : Pudukkotta ,Thutumariamman ,Temple ,Deroth , Local holiday for Pudukottai district on 13th March on the occasion of Muthumariamman temple procession.
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு; பாதாள சாக்கடை...