×

தொங்கு சட்டசபையா? 3 மாநிலங்களிலும் பாஜ ஆட்சி தான்: அடித்து சொல்கிறார் அசாம் முதல்வர்

கவுகாத்தி; திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜதான் வெற்றி பெறும் எந்த மாநிலத்திலும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு இல்லை  என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார் திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து உள்ளது இங்கு பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட உள்ளன வடகிழக்கு மாநிலங்களின் பாஜ பொறுப்பாளராக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார் அவர் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு குறித்து நேற்று கவுகாத்தியில் கூறியதாவது: திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய  3  மாநிலங்களிலும் ஒரு போதும் தொங்கு சட்டசபை அமையாது மூன்று மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் நாகலாந்தில் எங்களது கூட்டணி ஆட்சி தொடரும் திரிபுராவில் பாஜ முதல்வர் மீண்டும் நீடிப்பார் மேகாலயாவில்  பாஜ வெற்றி பெற்ற பிறகு முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் இருப்பினும் எந்த மாநிலத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் எங்கள் கூட்டணி கட்சியினர் கூட்டணி அமைக்க மாட்டார்கள் தேர்தல் முடிவு வெளியான பிறகும் அவர்கள் தங்கள் கூட்டணியை மாற்ற மாட்டார்கள் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்

* மேகாலயாவில்

8517 சதவீதம் மேகாலயா சட்டப்பேரவைக்கு பிப்27ல் நடந்த தேர்தலில் 8517 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன அங்கு 216 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிஆர் கார்கோங்கர் தெரிவித்தார் மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் 13 மையங்களில் எண்ணப்படுகின்றன இங்கு தொங்கு சட்டசபை அமையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன



Tags : BJP ,Assam ,CM , A hung assembly? BJP rule in all 3 states: Assam CM says
× RELATED ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக...