காஷ்மீர் பண்டிட்டை கொன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை

நகர்: ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ெதாடர்புடைய தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அச்சான் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா பண்டிட் இனத்தை சேர்ந்த இவர், வங்கியில் பாதுகாவலராக வேலை செய்து வந்தார் ஞாயிறன்று சஞ்சய் சர்மாவை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர் திங்களன்று அவரது ஊரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது இந்நிலையில் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான் கொல்லப்பட்ட தீவிரவாதி காஷ்மீர் பண்டிட் சர்மாவை சுட்டுக்கொன்ற தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது

Related Stories: