×

அரசு திட்டங்களுக்காக இழப்பீடு வழங்கிய பிறகு நிலங்கள் கையகம்: ஐகோர்ட் ஆலோசனை

சென்னை: கடந்த 2001ம் ஆண்டு வண்டலூர் பகுதியில் ஜி.எஸ்.டி சாலை மற்றும் மீஞ்சூர்-கொல்கத்தா நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  நில உரிமையாளர்களுக்கு ஒரு சென்ட்டுக்கு 1,150 ரூபாய் என்று இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதல் இழப்பீடு கோரி நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. கையகப்படுத்தும் நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஏற்ப இழப்பீட்டை நிர்ணயிப்பதன் மூலம் வழக்குகள் தாக்கல் செய்வது குறையும். இதுபோன்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும். அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் முன் உரிய இழப்பீட்டை உரிமையாளர்களுக்கு வழங்கலாம். மனுதாரர்களுக்கு சென்ட்டுக்கு ரூ.15,000 என்று நிர்ணயித்து கடந்த 2021 முதல் கணக்கிட்டு 15% வட்டியுடன் 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : ICourt , Acquisition of lands after compensation for government schemes: ICourt advice
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு