எஸ்சி, எஸ்டி சிறப்பு உட்கூறு துணை திட்டங்களை சட்டமாக்க விசிக போராடும்: திருமாவளவன் பேச்சு

சென்னை: சென்னையில் பட்டியல் இனத்தவருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான துணை திட்டத்திற்கான சட்டம் இயற்றக்கோரி இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் சார்பில் சமூக அமைப்புகளின் மாநாடு நடந்தது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், ‘‘எஸ்சி, எஸ்டி சிறப்பு உட்கூறு துணை திட்டங்களை சட்டமாக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.

Related Stories: