ஆஸ்திரேலியாவில் தமிழரை சுட்டு கொன்றது போலீஸ்

மெல்போர்ன்; ஆஸ்திரேலியாவில் துப்புரவுத்தொழிலாளியை தாக்கி, ேபாலீசாரை மிரட்டிய 32 வயது தமிழரை போலீசார் சுட்டுக்கொன்றனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர் முகமது ரகமத்துல்லா சையது அகமது. 32 வயதான இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வசித்து வந்தார். நேற்று சிட்னி ரயில்வே ஸ்டேஷனில் துப்புரவு ஊழியர் ஒருவரை அகமது கத்தியால் குத்தினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அவர்களையும் அகமது தாக்க முற்பட்டார். இதையடுத்து அகமதுவை 3 முறை போலீசார் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 குண்டுகள் அகமது உடலில் பாய்ந்தது.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,’ இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. மேலும் துரதிர்ஷ்டவசமானது. ஆஸ்திரேலிய போலீசாரிடம் இதுபற்றி விளக்கம் கேட்டு உள்ளோம்’ என்றார்.  நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித் கூறுகையில்,’ அகமதுவை சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இது அதிர்ச்சிகரமானது. எங்கள் காவல்நிலைய பகுதியில் இது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம். தாமதிக்க இந்த விவகாரத்தில் நேரம் இல்லாததால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இல்லாவிட்டால் அவர் அதிகாரிகளை தாக்கியிருப்பார். இருப்பினும் தீவிரவாத எதிர்ப்பு படை விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: