×

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் மீண்டும் போட்டி?..மனைவி ஜில் பிடன் அறிவிப்பு

கென்யா: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று அவரது மனைவி ஜில் பிடன் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடுகளான நமீபியா மற்றும் கென்யாவிற்கு சென்றுள்ள அமெரிக்க  அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டார். தொடர்ந்து அவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த  பேட்டியில், ‘அமெரிக்காவில் 2024ல் நடைபெறும் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான எனது கணவர் ஜோ பிடன் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக அடுத்த நான்காண்டு அவர் அதிபர் பதவியில் இருப்பார்’ என்றார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளாராக ஜோ பிடன் மீண்டும் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு ஏதும் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், ஜில் பிடனின் இந்த பேட்டி அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் போட்டியிடவிருக்கிறார். குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்ப்புக்குப் போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Tags : Joe Biden ,US ,Jill Biden , Joe Biden contest again in the US presidential election?..Wife Jill Biden announcement
× RELATED இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில்...