×

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவச பயிற்சி: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் S. அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு (SSC MTS, SSC CGL, SSC CHSL, SSC JE) 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் http://ssc.nic.in வெளியிடப்பட்டுள்ளது.

11,000 காலியான அரசு பணியிடங்கள் இத்தேர்வு மூலம் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற Veranda RACE என்ற நிறுவனத்துடன் இணைந்து தாட்கோ மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு ,  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Computer Based Test, Physical efficiency Test, Physical Standard Test(Only for the post of Havalder) , Document Verification ஆகிய மூன்று முறைகளில் நடைபெற உள்ளது. இப்போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000/- முதல் ரூ.22,000/- வரை பணியமர்த்தப்படுவார்கள்.

மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் S. அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும் மற்றும் பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு 044-25246344 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.



Tags : Central Government Personnel Selection Commission ,SSC ,Chennai Collector , Free Coaching for SC, ST Students Applying for Central Government Staff Selection Commission (SSC) Exam: Chennai Collector Notification
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள்...