மதுராந்தகம் அருகே பரபரப்பு: ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது

மதுராந்தகம்: சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவரும் கண்டக்டரும் உயிர் தப்பினர். கோவையில் இருந்து சென்னையை நோக்கி இன்று அதிகாலை ஆம்னி பஸ் சென்றது. அந்த பஸ்சில் பயணிகள் ஒருவர் கூட இல்லாமல் டிரைவரும் கண்டக்டர் மட்டுமே சென்றுள்ளனர். இந்த பஸ், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் உள்ள மேலவளம்பேட்டை பகுதியில் வரும்போது இன்ஜின் பகுதியில் கரும்புகை வந்த சிறிது நேரத்த்தில் தீப்பிடித்து எரிந்தது.

டிரைவரும் கண்டக்டரும் இறங்கி வந்து பார்த்தபோது பஸ் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் பெரும்பகுதி எரிந்து சேதம் அடைந்தது. இதுசம்பந்தமாக மதுராந்தகம் போலீசார் வழக்குபதிவு செய்து தீ பிடித்ததற்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories: