டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது உள்ளிட்டவை குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்த வாய்ப்பிருக்கிறது.
