×

உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தகுந்த உரிமம் பெற்ற லாரிகள் மூலமே கழிவுநீரை அகற்ற வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தகுந்த உரிமம் பெற்ற லாரிகள் மூலமே கழிவுநீரை அகற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்க ஏதுவாக உரிமம் பெற்ற லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் கழிவு நீரை நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Pollution Control Board , Local bodies, trucks, sewage, pollution control board
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்