டெல்லியில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தார் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டெல்லி: தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் மகளிர் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து இன்று மதியம் 1.15 மணியளவில் ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை கிரிராஜ் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் பொது தமிழகத்திற்கு தேவையான ஊரக வளர்ச்சி திட்டத்தின் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தினார்.  மேலும் ஊரக வளர்ச்சியில் இளைஞர்களுக்கு விளையாட்டு சார்ந்த போட்டிகளில் ஊக்குவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா- வை பிற்பகல் 3.30 மணியளவில் சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் மலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.

Related Stories: