×

எனது இனிய நண்பரும் முதல்வரும் ஆன மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்: ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நாளை பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள்  என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது: எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன். இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


Tags : G.K. Stalin ,Rajinikanth , May my dear friend and Prime Minister MK Stalin live long and in good health: Rajinikanth on his birthday
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...