சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று (28.02.2023) நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்ற கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு, அடுத்த மாமன்றக் கூட்டம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதன்படி, இன்று (28.02.2023) நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து தொடங்கப்பட்டது.
நூற்றாண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது. இதனைத் தொடர்ந்து 122வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசு மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு மாமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.