புதுச்சேரி: தேசிய அளவில் 3வது அணி தேவையில்லை; மதசார்பற்ற கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும் என டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா புதுச்சேரியில் பேட்டியளித்தார். மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பாஜகவிற்கு சாதகமாகிவிடும். தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் டி.ராஜா தெரிவித்தார்.