×

முத்துப்பேட்டை அலையாத்திகாட்டில் உத்தரகாண்ட் மாநில வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அலையாத்திகாட்டில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். தற்போது இங்கு சுற்றுலா பணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் உத்தரகாண்டம் மாநிலத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட அம் மாநிலத்தை சேர்ந்த 41வனச்சரக அலுவலர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள வனபகுதிகளை பார்வையிட்டு பயிற்சி கொண்டு முடிந்த பின்னர் சில தினங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வந்தனர்.இதில் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள வனப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தவர்கள் முக்கிய வனச்சரக பகுதியில் பயிற்சிகளும் அதன் சிறப்புகளும் தெரிந்துக்கொண்டனர். அதன்வகையில் நேற்று இந்த உத்தரகாண்டம் மாநிலத்தை சேர்ந்த வனச்சரக 41அலுவலர்கள் ஒரு பேரூந்து மூலம் முத்துப்பேட்டைக்கு வந்தனர். அவர்களை மாவட்ட வன அலுவலர் அறிவொளி உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வனசரக அலுவலர் ஜனனி மற்றும் வன துறையினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அனைத்து வனசராக அலுவலர்களும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக் காட்டிற்கு வனத்துறை படகு மூலம் அலையாத்திக் காட்டிற்கு சென்று அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்து அங்கு உள்ள அலையாத்தி மரங்களையும் அங்கு உள்ள அரிய வகை தாவரங்களையும் அங்குள்ள முக்கிய வன பகுதிகளையும் அங்கு வசிக்கும் பறவைகள் உட்பட உயிரினங்களையும் பார்த்தவர்கள் அலையாத்திக் காடு பகுதியில் உள்ள லகூன் மற்றும் அதனை ஒட்டிய நீர் பகுதியில் உற்பத்தியாகும் மீன்கள் குறித்தும் விவரங்கள் கேட்டிருந்தனர்.

பின்னர் அங்கு நடந்த பயிற்சியில் டாக்டர் செல்வம் சதுப்பு நில காடுகள் குறித்தும் அங்குள்ள தவரங்கள் குறித்தும் விளக்கி பல்வேறு செயல் விளக்கங்களை கொடுத்து பயிற்சி அளித்தார். பயிற்சி முடித்த பின்னர் அனைவரும் தமிழகத்தில் உள்ள வேறு பகுதிகளுக்கு சென்றனர். அப்பொழுது வனக்காப்பாளர்கள் கணேசன், சிவநேசன், சகிலா, விக்னேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Utterkhand State ,Muthupupattu Alyathikad , Muthupet: Training was conducted for Forest Officers from Uttarakhand State at Muthupet, Thiruvarur.
× RELATED 12 ஆங்கில நீதிக்கதைகள் அடங்கிய...