×

சவால்களை ஏற்று படிப்படியாக உயர்ந்து தன்னுடைய திறமையால் வளர்ந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: சவால்களை ஏற்று படிப்படியாக உயர்ந்து தன்னுடைய திறமையால் வளர்ந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு கமல்ஹாசன் பேட்டியளித்தார். கலைஞர் மகன் ஸ்டாலின் என்று இருந்த காலத்தில் இருந்து தமக்கு மு.க.ஸ்டாலின் தெரியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள். முதலமைச்சர் உடனான நட்பு, அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை இருவருமே நிரூபித்து கொண்டிருக்கிறோம் என கமல் கூறினார்.


Tags : Chief Minister ,M.K.Stalin ,Kamal Haasan , Challenge, ability, Prime Minister M.K. Stalin, Kamal Haasan
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்