முன்னாள் எம்.பி.மஸ்தான் கொலை வழக்கில் கைதான அவரது தம்பியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: முன்னாள் எம்.பி.மஸ்தான் கொலை வழக்கில் கைதான அவரது தம்பியின் ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் மஸ்தான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மஸ்தானின் மகன் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளனர்.

மஸ்தானின் தம்பி கவுஸ் ஆதம்பாஷா உட்பட 5 பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டனர். கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் மஸ்தானை கொலை செய்ததாக அவரது தம்பி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். கைதான மஸ்தானின் தம்பி கவுஸ் பாஷா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இம்ரான் பாஷா, முன்னாள் எம்.பி மஸ்தானிடம் 15 லட்சம் வரை கடனாக பெற்று இருந்த நிலையில், அதனை மஸ்தான் திரும்பக் கேட்டு வந்ததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி மஸ்தானை தனியாக காரில் அழைத்துச் சென்று மூச்சுத் திணற வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

அதன் பின் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக வெளியில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மஸ்தானை கொலை செய்ய திட்டமிட்ட இம்ரான் பாஷா, மூச்சு திணறல் மூலம் மாரடைப்பை ஏற்படுத்துவது எப்படி என இணையத்தில் தேடியது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் தொடர் விசாரணையில், மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதாம்பாஷாவும் கைது செய்யப்பட்டார். மஸ்தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைவர் இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கௌசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த போலீசார் ஆதம்பாஷாவினை கைது செய்தனர்.

காவல்துறையினரிடம் ஆதாம்பாஷா வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில், 15 லட்சம் ரூபாய் கடனைத் திரும்பக் கேட்டதால், நண்பர்களின் உதவியுடன் அண்ணனைக் கொன்றதாக கூறியுள்ளார். இதனால், பூர்வீக சொத்து தகராறு மற்றும் பணப் பிரச்சனையே மஸ்தான் கொலைக்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்தது.

Related Stories: