×

காஷ்மீரில் பண்டிட்டை கொன்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட்டை கொன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில்  பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. புல்வாமா மாவட்டம், அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (40)என்பவர் சந்தைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது தீவிரவாதிகள் சஞ்சய் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.பண்டிட் சமூகத்தை சேர்ந்த சஞ்சய் சர்மா ஏடிஎம் மைய காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.அப்போது, புல்வாமா மாவட்டம் அவந்திபுரா நகரில் பட்கம்புரா என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட்டை கொன்றவன் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார், சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் அக்கிப் முஸ்தாக் பட். இவர் முதலில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் பணியாற்றியவர். பின்னர் லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டில் (டிஆர்எஃப்) இணைந்து பணியாற்றியவர். அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதி. சமீபத்தில் புல்வாமாவில் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவை கொன்றவன், எனக் கூறினார்.


Tags : Pandit ,Kashmir , Kashmir, Pandit, Terrorist
× RELATED திராவிடப் பேரொளி அயோத்திதாசப்...