மதுரை: அனைத்து கோயில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. எவ்விதமான யானைகளையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சார்ந்த ஜெத் முகமது-வுக்கு சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண்யானை. இதன் பராமரிப்பு குறித்து வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, யானையை பாகனிடம் இருந்து பிரித்து அழைத்து செல்லவேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பரப்பிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக கோயில் விழாவுக்கு யானை அழைத்து செல்லப்பட்டபோது காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும் யானையை முறையாக பராமரித்து அது குறித்த அறிக்கையை சரியான கால இடைவெளியில் அனுப்புமாறும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
யானை பராமரித்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக அந்த அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே மருத்துவர் கலைவாணனை லலிதா யானை பராமரிப்புக்கான சிறப்பு பணிக்காக ஒதுக்கவேண்டும். யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர் கலைவாணன் அறிக்கை தக்கல் நீதிமன்றத்தில் செய்ய வேண்டும். முறையான மருத்துவமும், உணவும் யானைக்கு வழங்கவேண்டும் என நீதிபதிகள் கூறினார்.
லலிதா யானைக்கு 60 வயது இருக்க கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் உணவும், பராமரிப்பும் வழங்கி ஓய்வெடுக்க செய்யவேண்டும். லலிதா யானையை எவ்விதமான வேலையிலும் ஈடுபடுத்த கூடாது. இனி வரும் காலங்களில் எவ்வித யானைகளையும் வளர்ப்பு யானைகளாக மாற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல இடங்களில் யானைக்கு முறையான வசதி செய்துகொடுப்பதில்லை. பாகன்கள் குடித்துவிட்டு யானைகளை துன்புறுத்தும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில சமயங்கள் ஆக்ரோஷமாக மாறி யானைகள் பாகன்களையே தாக்கும் சூழல் நிலையெல்லாம் ஏற்படுகிறது என குறிப்பிட்ட நீதிபதி, யானைகள் அரசு மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப படவேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம் எனவும், அனைத்து கோயில்களுக்கும் இந்த உத்தரவானது வழங்கப்பட வேண்டும் எனவும், அதுபோக எல்ட்ட பௌண்டடின் தரப்பில் திருப்பத்தூர், சேலம் மாவட்டங்கள் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கு தகுந்த இடங்களாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இது தொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

