2022ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான FIFA விருதை வென்றார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி!

பாரீஸ் : 2022ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளன சிறந்த வீரராக அர்ஜென்டினாவின் நட்சித்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2022ம் ஆண்டுக்கான ஃபிஃபா கால்பந்து விருதளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் சிறந்த வீரராக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார். பிரான்சின் கைலியன் எம்பாப்வே அதற்கான போட்டியில் இடம் பெற்று இருந்தார். முடிவில் சிறந்த வீரர் விருதை மெஸ்ஸி தட்டிச் சென்றார்.  

சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை விருதுக்கான போட்டியில், இங்கிலாந்தின் பெத் மீட், அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கன் மற்றும் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இறுதியில் அலெக்ஸியா புட்டெல்லாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.மொராக்கோவின் யாசின் பவுனோ, அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ், பெல்ஜியத்தின் திபாட் கோர்டோஸ் ஆகியோர் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த நிலையில் எமிலியானோ மார்டினெஸுக்கு விருது வழங்கப்பட்டது.

Related Stories: