×

உலக கோடீஸ்வரர்கள் என்ற பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்!!

டெல்லி : உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்திற்கு தள்ளப்பட்டார் தொழில் அதிபர் கவுதம் அதானி. உலக கோடீஸ்வரர்கள் என்ற பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். எலான் மஸ்க் நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்ததால் 2ம் இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு தாவி இருக்கிறார் எலான் மஸ்க். இந்த தகவலை பிரபல தனியார் வர்த்தக தரவு ஆய்வு நிறுவனமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அழகு சாதனப் பொருள் தயாரிப்பு நிறுவனமான லீ - வூட்டுன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்னால்டு உலகின் முதல் கோடீஸ்வரராக நீடித்து வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2ம் இடத்தில் இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 16 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது.இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்ததை தொடர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போதைய எலான் மஸ்கின் தோராயமான சொத்து மதிப்பு 15 லட்சத்து 47 கோடி ரூபாய் என்றாலும் முதல் இடத்தை அவர் எட்டிப்பிடித்துள்ளார்.ட்விட்டர் நிறுவனத்தின் 8வது முறையாக ஆட்குறைப்பு செய்த எலான் மஸ்க், செலவை வெகுவாக குறைத்ததும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2ம் இடத்தில் உள்ள லீ - வூட்டுன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்னால்ட்டின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது.


Tags : Tesla ,Elon Musk , World, Billionaires, Tesla, Founder, Elon Musk
× RELATED டெஸ்லா ஊழியர்கள் 14,000 பேர் பணி நீக்கம்