புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு..!!

டெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

Related Stories: