×

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடக்கம்.

2. திருநங்கைகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

3. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

4. தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில்முனைவோர்களாக்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

5. மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

6. ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

7. பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Tags : Anna ,Century Library ,Chief Minister ,MC. ,G.K. Stalin , Booming 7 Project, Chief Minister M.K.Stalin
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...