×

அமெரிக்காவை அடுத்து கனடாவிலும் அரசு ஊழியர்களின் சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை!!

ஒட்டாவா : கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்,  அரசு ஊழியர்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அமெரிக்காவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில்,  அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை என நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டின் கருவூல வாரியத் தலைவர், மோனா போர்டியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவை, தங்களது அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களில், டிக்-டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதைதொடர்ந்து, கனடாவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது.இந்த தடை உத்தரவு, இன்று (பிப்.,28)ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கனடா அரசால் வழங்கப்பட்டுள்ள, மின்னணு சாதனங்களில், செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்படுவதுடன், ஏற்கனவே, பதிவிறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தால், அவை, அகற்றப்படும்,எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : United States ,Canada , United States, Canada, government employees, Tik Tok, app
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்