குடிபோதையில் தகராறு செய்தவக்கீல் கணவரை தாக்கி கடித்து வைத்த பெண் காவலர்: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை பெண் போலீஸ் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் மணிவாணன் (33). இவர் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அதே தெருவைச் சேர்ந்தவர் மருதாயி (27). இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய முதல் கணவர் கடந்த 2017ம் ஆண்டு விபத்தில் இறந்துவிட்டார். பின்பு கடந்த 2022ம் ஆண்டு, வக்கீல் மணிவாணனை மருதாயி 2வது திருமணம் செய்தார். திருவொற்றியூரில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மருதாயி கணக்கர் தெருவில் உள்ள தன் சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வக்கீல் மணிவாணன் குடித்துவிட்டு போதையில் மருதாயி வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த மருதாயி, அரிவாள்மனை கட்டையால் மணிவாணனை கடுமையாக தாக்கி, அவருடைய கையில் கடித்து வைத்துள்ளார். இதனால் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த மணிவாணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: