மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்துவதற்கான வியூகத்தில் முதல் தளபதியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வந்து ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் முதல்வரின் செயல்பாடுகளை கண்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாராட்டுகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜ அரசு, தமிழகத்திற்கு உரிய நிதிகளை கொடுக்காமல் ஆளுநர் மூலம் அடக்கி ஆள நினைக்கிறது. மாநில உரிமையை பேணி காத்து சரியான பதிலடி கொடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்திய துணை கண்டத்தில் உள்ள தலைவர்கள் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த வியூகம் அமைக்க இருக்கிறார்கள். அந்த வியூகத்தின் முதல் தளபதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் இருப்பார். தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமை கூட்டணி போல், மத்தியிலும் கூட்டணியை தானே, முன்நின்று ஏற்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சூளூரையாக சபதம் ஏற்று, மத்தியில் ஆளும் பாஜவை விரட்ட வேண்டும்.

Related Stories: