×

ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வசதி பிஎப்பில் அதிக பென்சனுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்ட தீர்ப்பில், தொழிலாளர்களின் ஓய்வூதிய திருத்த சட்டத்தை உறுதி செய்து, தகுதிவாய்ந்த ஊழியர்கள் அதிக பென்சனைத் தேர்தெடுப்பதற்கு 4 மாதம் அவகாசம் வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு (இபிஎப்ஓ) உத்தரவிட்டது. இதன்படி, ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் இருந்து 8.33 சதவீதத்தை பென்சன் திட்டத்திற்கு பங்களிப்பதன் மூலம் அதிக பென்சன் பெற முடியும்.   நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் 3ம் தேதி இதற்கான காலக்கெடு முடியவடைய இருந்தது. இந்நிலையில், அதிக பென்சனுக்கான கூட்டு விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் வசதி இபிஎப்ஓ இணையதளத்தில் தற்போது அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதில் மே 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி  https://unifiedportal-mem.epfindia.gov.in/memberInterfacePohw/ ஆகும்.

Tags : BP , Online registration facility Extension of time to apply for higher pension in BP
× RELATED கன்வார் யாத்திரை விவகாரம்: கடைகளின்...