×

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணய குறியீட்டில் பின்தங்கிய இந்தியா

புதுடெல்லி: சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணயம் தொடர்பான குறியீடுகளில் இந்தியா பின்தங்கி உள்ளது என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள்  எழுதிய கட்டுரை லான்செட் மருத்துவ இதழில் வெளிவந்துள்ளது. அதில், ஐநா சபை நிலையான வளர்ச்சி இலக்குக்கான பட்டியலில் மொத்தம் 33 குறியீடுகள் உள்ளன.

அதில், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் சமூக நிர்ணயம் தொடர்பான குறியீடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அடிப்படை வசதிகளுக்கான அணுகல், வறுமை ஒழிப்பு, வயிற்று போக்கு, குழந்தைகள் திருமணம், புகையிலை பயன்பாடு, நவீன கருத்தடைகள் பயன்பாடு போன்ற  முக்கிய குறியீடுகளில் இந்தியாவில் உள்ள 75 சதவீத மாவட்டங்கள் குறிப்பிட்ட இலக்கை விட மிகவும் பின்தங்கி உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் பெரும்பாலும் மத்திய பிரதேசம்,சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார்,ஒடிசாவில் உள்ளன.

மொத்தம் உள்ள 33 குறியீடுகளில் 19 விஷயங்களில் இந்தியா இன்னும் தனது இலக்கை அடையவில்லை. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 2030ம் ஆண்டுக்குள் கூட இந்த இலக்கை  அடைய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.  




Tags : India , India lags behind in Social Determinants Index of Health and Wellness
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!