×

ரூ.9136 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு பாக்கி: ஒன்றிய அரசு மீது குஜராத் குற்றச்சாட்டு

காந்திநகர்: ஒன்றிய அரசு ரூ.9136 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு இன்னும் தரவில்லை என்று குஜராத் சட்டப்பேரவையில் பா.ஜ அரசு குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பூபேந்திரபட்டேல் உள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த விவாதத்தின் போது மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா பேசும்போது,’ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குஜராத் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்’என்றார். அதற்கு நிதியமைச்சர் கானுபாய் தேசாய் பதில் அளித்து கூறும்போது,’2021 முதல் 2023ம் ஆண்டு வரையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.30,400 கோடியை ஒன்றிய அரசு தர வேண்டும். அதில் ரூ. 21,264 கோடி தரப்பட்டுவிட்டது. இன்னும் ரூ.9136 கோடி தரவில்லை. இதுவரை தந்தநிதியிலும் ரூ.4200 கோடி மட்டும் பணமாக தரப்பட்டுள்ளது’என்றார்.

Tags : Gujarat Accuses Union Govt , Rs 9136 Crore GST Compensation Arrears: Gujarat Accuses Union Govt
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி